Parimelazhaghar's commentary in its original form: 941 மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. மிகினும் குறையினும் - உணவும் செயல்களும் ஒருவன் பகுதிக்கு ஒத்த அளவின் அன்றி அதனின் மிகுமாயினும் குறையுமாயினும் ; நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று நோய் செய்யும் - ஆயுள்வேத முடையாரால் வாதமுதலாக எண்ணப்பட்ட மூன்று நோயும் அவருக்குத் துன்பஞ் செய்யும். விளக்கம் (' நூலோர் எண்ணிய ' எனவே , அவர் அவ்வாற்றான் வகுத்த வாதப்பகுதி பித்தப்பகுதி ஐயப்பகுதி என்னும் பகுதிப்பாடும் பெற்றாம். அவற்றிற்கு உணவு ஒத்தலாவது சுவை வீரியங்களானும் அளவானும் பொருந்துதல். செயல்கள் ஒத்தலாவது மனமொழி மெய்களாற் செய்யும் தொழில்களை அவை வருந்துவதற்கு முன்னே ஒழிதல். இவை இரண்டும் இங்ஙனமின்றி மிகுதல் குறைதல் செய்யின் , அவை தத்தம் நிலையின் நில்லாவாய் வருத்தும் என்பதாம். காரணம் இரண்டும் அவாய்நிலையான் வந்தன. முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. இதனால் யாக்கைகட்கு இயல்பாகிய நோய் மூவகைத்து என்பதூஉம் , அவை துன்பஞ்செய்தற்காரணம் இருவகைத்து என்பதூஉம் கூறப்பட்டன இன்பம் ...
An Intuitive Commentary of Holy Kural by Phd Siva (www.mccrf.org), an ancient Tamil Classic, by Saint Valluvar. "It is a grand mosaic of cultural creation, a repertory of universal thoughts and truths. It is the one Book for all times and a world that lives it shall enjoy eternal peace, harmony, health, wealth, power, grace, and bliss." - From Yogi Suddhananda Bharati's English Couplets Introduction